ஆன்லைன் வாடிக்கையாளர் சேவை எண் : 7397387896

நிலையான வளர்ச்சி இலக்குகள்

நிலையான வளர்ச்சி இலக்கு என்பது ஐக்கிய நாடுகளின் உறுப்பினர்களாக உள்ள அனைத்து நாடுகளும், நாட்டின் சிறந்த எதிர்காலத்திற்காக செயல்பட ஒப்புக்கொண்ட 17 வழிகாட்டி இலக்குகளின் தொகுப்பாகும்.

இலக்கு 8 – மதிக்கத்தக்க வேலை மற்றும் வேலை வாய்ப்பை உருவாக்குதல்

8.5. ஆண்கள், பெண்கள் அனைவருக்கும் உற்பத்தித் திறனுடன் கூடிய வேலைவாய்ப்பை உருவாக்குதல்.

தமிழ்நாடு கதர் கிராமத்தொழில் வாரியச்சட்டம் 1959-இல் இயற்றப்பட்டதின் முக்கிய நோக்கமானது, கிராமப்புற ஏழை கைவினைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை உருவாக்குதல், சுற்றுசூழலுக்கு உகந்த விற்பனையாகக்கூடிய பொருட்களை உற்பத்தி செய்தல், கிராமப்புற ஏழை மக்களிடையே சமூக உணர்வினை மேம்படுத்தி சுயசார்பினை வளர்த்தல், கிராமப்புற கைவினைஞர்களை ஒருங்கிணைத்து அவர்களின் உற்பத்தி திறன் மற்றும் இலாபத்தினை மேம்படுத்துதல் ஆகும். வாரியமானது, நிலையான வளர்ச்சி இலக்கினை (Sustainable Development Goal No.8) அடையும் பொருட்டு, கிராமப்புற பெண்களுக்கு உகந்த வேலை வாய்ப்பினை வழங்கி வருகிறது.