ஆன்லைன் வாடிக்கையாளர் சேவை எண் : 7397387896

விற்பனை நிலையங்கள்

வாரியத்தின் பல்வேறு அலகுகளில் உற்பத்தி செய்யப்படும் கதர் மற்றும் கிராமப் பொருட்களை அதிக அளவில் சந்தைப்படுத்திட ஏதுவாக ”காதி கிராப்ட்” எனும் விற்பனை அங்காடிகள் சென்னை குறளக கட்டடம் மற்றும் பிற மாவட்டங்களில் செயல்பட்டு வருகின்றன. வாரிய அலகுகளில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களைத் தவிர, சுய உதவிக்குழுக்கள் மற்றும் பாரம்பரிய கைவினைஞர்கள் உற்பத்தி செய்யும் கைவினைப்பொருட்களும் 48 காதிகிராப்ட் விற்பனை நிலையங்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

கண்காட்சிகள் மற்றும் அரசு அலுவலக வளாகங்களில் சிறப்பு விற்பனை நிலையங்கள் அமைத்து, கதர் மற்றும் கிராமப் பொருட்களின் விற்பனையை பிரபலப்படுத்துவதற்கு சிறப்புக்கவனம் அளிக்கப்படுகிறது. நவராத்திரி பண்டிகை காலத்தில் சென்னை குறளக கதரங்காடியில் நடைபெறும் வருடாந்திர நவராத்திரி கொலு பொம்மை விற்பனை மற்றும் கண்காட்சி சிறப்பு பெற்றதாகும்.

மண்பாண்ட தொழிலாளர்களால் உற்பத்தி செய்யப்படும் பாரம்பரிய மற்றும் நிகழ்கால கலைநயமிக்க காகித கூழ் மற்றும் மண் பொம்மைகளைச் சந்தைப்படுத்தி விற்பனை செய்வதற்கு இக்கண்காட்சி உகந்த தளமாகத் திகழ்கிறது.

கடந்த மூன்று ஆண்டுகளில் கிராமப் பொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனை விபரங்கள்:-

வ. எண்

வருடம்

உற்பத்தி

விற்பனை

(ரூ.இலட்சத்தில்)

1

2018-2019

2,445.92

2,481.26

2

2019-2020

1,706.39

1,810.11

3

2020-2021

2728.45

3864.94

4

2021-2022

(ஜூலை’2021 வரை)

930.27

994.28