ஆன்லைன் வாடிக்கையாளர் சேவை எண் : 7397387896
ஒன்றிய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அமைச்சகம் “பிரதம மந்திரியின் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம்" 2008-2009 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியம், தமிழ்நாடு தொழில்கள் மற்றும் வணிகத் துறை மற்றும் மும்பை கதர் கிராமத்தொழில் ஆணைக்குழு ஆகியவற்றின் மூலம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டமானது 01.07.2016 முதல் வெற்றிகரமாக இணைய வழி வாயிலாக நடைமுறைப்படுத்தி செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2019-2020-ஆம் ஆண்டிலிருந்து மத்திய கயிறு வாரியமும் இத்திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது.
இத்திட்டத்தின்கீழ் உற்பத்தியில் ஈடுபடும் பயனாளிகளுக்கு திட்ட மதிப்பீட்டின்படி அதிகபட்சமாக ரூபாய் 25 இலட்சமும், சேவைப் பிரிவில் ஈடுபடும் பயனாளிகளுக்கு அதிகபட்சமாக ரூபாய் 10 இலட்சமும் வங்கிகளால் கடன் அனுமதிக்கப்படுகிறது. உற்பத்திப் பிரிவின்கீழ் ரூபாய் 10 இலட்சத்திற்கு மேல் பெறும் வங்கி கடன்களுக்கும், சேவைப் பிரிவின்கீழ் ரூபாய் 5 இலட்சத்திற்கு மேல் பெறும் வங்கி கடன்களுக்கும், பயனாளிகளின் கல்வித் தகுதியாக குறைந்தபட்சம் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பயனாளிகள் வரும் பிரிவு |
மானியம் வரம்பு ( திட்ட மதிப்பீட்டில்) |
|
இடம் |
நகர்ப்புறம் |
கிராமப்புறம் |
பொதுப் பிரிவு |
15% |
25% |
சிறப்புப் பிரிவினர் (பட்டியல் இனத்தோர் / பழங்குடியினர் / இதர பிற்படுத்தப்பட்டோர் / சிறுபான்மையினர் / முன்னாள் இராணுவத்தினர் / மாற்றுத்திறனாளிகள் / வடகிழக்கு மலை மற்றும் எல்லைப்புற பகுதியினர்) |
25% |
35% |
பயனாளிகள் பிரிவு |
சொந்த முதலீடு |
பொதுப் பிரிவு |
10% |
சிறப்புப் பிரிவினர் (பட்டியல் இனத்தோர் / பழங்குடியினர் / இதர பிற்படுத்தப்பட்டோர் / சிறுபான்மையினர் / முன்னாள் இராணுவத்தினர் / மாற்றுத்திறனாளிகள் / வடகிழக்கு மலை மற்றும் எல்லைப்புற பகுதியினர்) |
5% |
ஏற்கனவே மானியம் பெற்று திறம்பட செயல்பட்டுக் கொண்டிருக்கும் அலகுகளுக்கு மீண்டும் ஒருமுறை கடன்தொகை கொடுத்து உதவிட, இரண்டாம் முறை கடன் என்ற திட்டத்தை இந்திய அரசாங்கம் 2018-2019 ஆண்டு முதல் அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கென தனிப்பட்டமுறையில் PMEGP e-portal தனியாக உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில், உற்பத்தி சார்ந்த தொழில்களுக்கு ரூபாய் 1 கோடி வரையிலும், சேவை சார்ந்த தொழில்களுக்கு ரூபாய் 25 இலட்சம் வரையிலும் கடன்தொகை அனுமதிக்கப்படுகிறது.
மேலும், அனைத்துப் பிரிவினருக்கும், திட்ட மதிப்பீட்டில் பயனாளியின் சொந்த முதலீடு 10 விழுக்காடு ஆகவும் வங்கிக்கடன் 90 விழுக்காடு ஆகவும் நிர்ணயிக்கப்படுகிறது. மொத்த திட்ட மதிப்பீட்டில், மானிய விளிம்புத் தொகையாக 15 விழுக்காடு வழங்கப்பட்டு வருகிறது.
2016-2017 ஆம் ஆண்டு முதல் 2021-2022 (ஜூலை வரை) ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு கதர் கிராமத்தொழில் வாரியம் மூலம் விடுவிக்கப்பட்ட மானிய விளிம்புத் தொகை மானிய விபரங்கள் பின்வருமாறு:-
ஆண்டு |
(திட்டம் எண்ணிக்கையில்/ரூபாய் இலட்சத்தில்) |
|||||
குறியீடு |
சாதனை |
|||||
செயல் இலக்கு |
நிதி இலக்கு |
உருவாக்கப்பட வேண்டிய வேலை வாய்ப்புகள் (நபர்கள்) |
செயல் இலக்கு |
நிதி இலக்கு |
உருவாக்கப் பட்ட வேலை வாய்ப்புகள் (நபர்கள்) |
|
2016-17 |
1,261 |
2,521.50 |
10,088 |
745 |
2,166.48 |
8,384 |
2017-18 |
1,810 |
3,570.00 |
14,480 |
882 |
1,680.74 |
6,723 |
2018-19 |
822 |
2,400.94 |
6,576 |
1,078 |
2,236.49 |
6,106 |
2019-20 |
627 |
1,882.38 |
5,016 |
976 |
1,773.45 |
5,320 |
2020-21 |
783 |
2,360.62 |
6,296 |
792 |
1,829.75 |
5,489 |
2021-2022 (ஜூலை 2021 வரை) |
1058 |
3,068.87 |
8468 |
202 |
493.63 |
1974 |