ஆன்லைன் வாடிக்கையாளர் சேவை எண் : 7397387896
தமிழ்நாடு கதர் கிராமத்தொழில் வாரியத்தின் கீழ் கதராணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட தொழில்களை மேற்கொள்ளும் 164 தொழிற் கூட்டுறவுச் சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இக்கூட்டுறவுச் சங்கங்களுக்கு தமிழ்நாடு கதர் கிராமத்தொழில் வாரியத்தின் தலைமை செயல் அலுவலர் அவர்கள் செயற் பதிவாளராக செயல்பட்டு வருகிறார். மேற்படி, கூட்டுறவுச் சங்கங்களின் கணக்கு மற்றும் பிற செலவின விவரங்கள் கூட்டுறவு தணிக்கைத் துறையினரால் தணிக்கை செய்யப்பட்டு வருகிறது. இக்கூட்டுறவுச் சங்கங்கள் 2020-2021-ஆம் ஆண்டில் ரூ.2,195.37 இலட்சத்திற்கு உற்பத்தி செய்தும் ரூ.2,435.23 இலட்சத்திற்கு விற்பனையும் செய்துள்ளது. 2021-2022-ஆம் ஆண்டில் ஜூலை’2021 வரை ரூ.670.12 இலட்சத்திற்கு உற்பத்தி செய்தும் ரூ.698.30 இலட்சத்திற்கு விற்பனையும் செய்துள்ளது.