ஆன்லைன் வாடிக்கையாளர் சேவை எண் : 7397387896

கதர்

கதர், இந்திய சுதந்திர இயக்கத்தோடு நெருங்கிய தொடர்பு உள்ளதால், இந்தியர்களிடையே தேசபக்தி, அமைதி மற்றும் எளிமை உணர்வை அளிக்கிறது. கதர், இந்திய கலாச்சாரம் மற்றும் வாழ்வின் வழிமுறைகளை நிலைநிறுத்துவதோடு, இந்திய கிராமங்களில் பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு முன்மாதிரியாக விளங்குகிறது. கதர் துணியானது பருத்தி மற்றும் பட்டு நூலிருந்து கையினால் இயக்கப்படும் இராட்டைகள் மூலம் நூற்கப்படும் நூலினால் நெய்யப்படுகிறது. கதர் துணிகள் இயற்கையானது, உறுதியானது மற்றும் இந்திய தட்பவெட்ப நிலைக்கு ஏற்றவாறு உடலுக்கு குளிர்ச்சியையும் அளிக்கிறது.

கதர் பருத்தி மற்றும் பாலிவஸ்திரா

கதர் வாரியத்தால் பாரம்பரியமாக செய்யப்பட்டு வரும் பணிகளில் ஒன்று கதர் உற்பத்தி ஆகும். இப்பிரிவில் செய்யப்படும் கதர் உற்பத்திப்பணிகள் அனைத்தும் கையினால் செய்யப்படுவதால், கிராமப்புறத்தில் உள்ள கைவினைஞர்களுக்கு மிகப்பெரிய அளவில் வேலைவாய்ப்பு கிடைக்க வழிவகை ஏற்படுகிறது. நூல் நூற்கும் பணி மற்றும் நெசவு தொழில் ஆகியவைகள் பெரும்பாலும் பெண்களைக் கொண்டே நடைபெற்று வருகிறது. இத்தொழில், நூற்பு, நெசவு, சலவை மற்றும் சாயமேற்றுதல் போன்றவற்றை உள்ளடக்கியதாகும். கதர்பருத்தித் துணி 100 விழுக்காடு பருத்தி இழைகளினால் உற்பத்தி செய்யப்படுகிறது.

சந்தையில் பாலியஸ்டர் வந்தபின்பு பாலியஸ்டர் நூலில் பாலியஸ்டர் இழை மற்றும் பருத்தி இழை முறையே 67:33 என்ற விகிதத்தில் இணைக்கப்படுகிறது. தற்போது கதர் வாரியத்தில் கீழ் குறிப்பிட்ட கதர் அலகுகள் செயல்பட்டு வருகின்றன:-

வ. எண்.

அலகுகள்

எண்ணிக்கை

1.

கிராமிய நூற்பு நிலையம்

31

2.

கதர் உபகிளை

23

3.

கதர் பட்டு உபகிளை

8

மேலும், கதர் மற்றும் கிராமத்தொழில்கள் ஆணைக்குழுவினால் சான்றளிக்கப்பட்ட 66 சர்வோதய சங்கங்களும் கதர் உற்பத்தியினை செய்து வருகின்றன. கதர் உற்பத்தி அலகுகள் குறிப்பாக, கிராமப்புற பெண்களையும் உள்ளடக்கிய கைவினைஞர்களுக்கு வாழ்க்கைத் தேவையை நிறைவு செய்ய போதிய வருவாயை ஈட்டி தருகிறது. கதர் பருத்தி, பாலிவஸ்திரா இரகங்களான வேட்டிகள், சட்டைத் துணிகள், துண்டுகள், போர்வைகள், படுக்கை விரிப்புகள், சீருடை துணிகள் மற்றும் இதர பெரும்பான்மையான கதர் ரகங்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.

நடப்பாண்டில் கதர் உற்பத்தி அலகுகளில் 1,116 நூற்பாளர்கள் மற்றும் 224 நெசவாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றார்கள். இவ்வலகுகளின் மூலம் உற்பத்தி செய்யப்படும் கதர் இரகங்கள் 48 கதர் அங்காடிகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

2018-2019 முதல் 2020-2021 வரையிலான கதராணைக்குழு மற்றும் சான்றளிக்கப்பட்ட நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட பட்டைப் பஞ்சு, துணி உற்பத்தி மதிப்பு, நூற்பாளர்களின் எண்ணிக்கை, வழங்கப்பட்ட நூற்பு கூலி மற்றும் நெசவாளர்களின் எண்ணிக்கை, வழங்கப்பட்ட நெசவு கூலி ஆகிய விபரங்கள் பின்வருமாறு:-

வருடம்

2018-2019

2019-2020

2020-2021

2021-2022 (ஜூலை 2021 வரை)

கொள்முதல் செய்யப்பட்ட பட்டை பஞ்சு (கிலோ)

1,29,493

54,727

3,780

10,088

மதிப்பு (ரூ.இலட்சத்தில்)

237.70

101.24

7.77

20.83

துணி உற்பத்தி மதிப்பு (ரூ.இலட்சத்தில்)

923.33

477.13

377.59

152.69

நூற்பாளர்களின் எண்ணிக்கை

2,304

1,367

1,116

1025

நூற்பு கூலி (ரூ.இலட்சத்தில்)

247.25

105.12

83.18

6.33

நெசவாளர்களின் எண்ணிக்கை

407

311

224

194

நெசவு கூலி (ரூ.இலட்சத்தில்)

172.16

62.23

44.82

9.95

கடந்த மூன்று ஆண்டுகளில் கதர் வாரிய அலகுகளில் நடைபெற்ற உற்பத்தி மற்றும் விற்பனை விபரங்கள்:-

வ. எண்.

வருடம்

உற்பத்தி

விற்பனை

(ரூ.இலட்சத்தில்)

1

2018-2019

923.33

1,044.55

2

2019-2020

477.13

980.88

3

2020-2021

377.59

1297.29

4

2021-2022

(ஜூலை 2021 வரை)

116.70

170.23