ஆன்லைன் வாடிக்கையாளர் சேவை எண் : 7397387896
கதர் கிராமத் தொழில் ஆணையம், கதர் உற்பத்தி மற்றும் விற்பனையினை ஊக்குவிக்கும் வகையில் ’’வணிக அபிவிருத்தி நிதியுதவி திட்டத்தினை’’ (MD-A) 2010-2011-ல் அறிமுகப்படுத்தியது.
வணிக அபிவிருத்தி நிதியுதவித் திட்டம் என்பதை, திருத்திய வணிக அபிவிருத்தி நிதியுதவித் திட்டம் (MMDA) என 2016-2017-ம் ஆண்டு முதல், மாற்றம் செய்து கதர் உற்பத்தியின் முதன்மை செலவின மதிப்பில் 30 விழுக்காடு நிதியுதவியை கீழ்க்கண்டவாறு கணக்கிடப்பட்டு காலாண்டு வாரியாக பிரித்து வழங்கப்படுகிறது.
1. |
நூற்போர் / நெசவாளர்களுக்கான ஊக்கத் தொகை |
30% |
2. |
கைவினைஞர்களுக்கான ஊக்கத் தொகை |
10% |
3. |
உற்பத்திக்கான உட்கட்டுமான பணி மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சிக்காக (உற்பத்தி நிறுவனங்களுக்காக) |
20% |
4. |
விற்பனை உட்கட்டமைப்பு கணினி மயமாக்கல் உள்பட (உற்பத்தி நிறுவனங்களுக்காக) |
20% |
5. |
வணிகம் மற்றும் விற்பனை மேம்படுத்துதல் (விற்பனை நிறுவனங்களுக்காக) |
20% |
தமிழ்நாடு கதர் கிராமத்தொழில் வாரியம் மற்றும் 66 சர்வோதய சங்கங்கள் ஆகியவற்றில் உற்பத்திப் பணிகளில் ஈடுபடும் நூற்பாளர் மற்றும் நெசவாளர்களுக்கு 30 விழுக்காடு ஊக்கத் தொகையும், கைவினைஞர்களுக்கு 10 விழுக்காடு ஊக்கத்தொகையும் கதராணையம் மூலமாக ஒவ்வொரு காலாண்டிற்கும் தனியரின் வங்கி கணக்கிற்கு மின்னணுத் தீர்வை மூலம் அனுப்பப்பட்டு வருகிறது. வழங்கப்பட்ட விவரம் கதராணையத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. எஞ்சியுள்ள 60 விழுக்காடு (வரிசை எண் 3,4 மற்றும் 5 ஒவ்வொன்றுக்கும் 20 விழுக்காடு) சர்வோதய சங்கம் மற்றும் கதர் கிராமத்தொழில் வாரிய கணக்கில் கதராணையத்தால் உற்பத்தி உட்கட்டமைப்பு, திறன் மேம்பாடு மற்றும் விற்பனை உட்கட்டமைப்பு மற்றும் வணிக மேம்பாடு போன்றவைகளுக்காக வரவு வைக்கப்பட்டு வருகிறது. அவ்வகையில் கதர் கிராமத் தொழில் வாரியத்தால் பெறப்பட்ட வணிக அபிவிருத்தி நிதியுதவியின் விபரம்:-
வ. எண். |
வருடம் |
கதராணையத்திலிருந்து பெறப்பட்ட தொகை (ரூ.இலட்சத்தில்) |
1. |
2018-2019 |
210.43 |
2. |
2019-2020 |
230.30 |
3. |
2020-2021 |
77.91 |
இத்திட்டத்தினை செயல்படுத்துவதற்கான வழிமுறைகள் கதர் கிராமத்தொழில் ஆணைக்குழுவால் அளிக்கப்படுகிறது..
தமிழக அரசும் வணிக அபிவிருத்தி நிதியுதவியாக கதர் உற்பத்தி செலவின மதிப்பின் மீது 20 விழுக்காடு அனைத்து சர்வோதய சங்கங்களுக்கும் மற்றும் தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்திற்கும் வழங்கி வருகிறது. 2017-18-ஆம் ஆண்டிலிருந்து மாநில அரசு, சர்வோதய சங்கங்களுக்கு வழங்கப்படும் நிதியுதவியின் உச்சவரம்பினை ரூபாய் 15 கோடியிலிருந்து ரூபாய் 30 கோடியாகவும், கதர் வாரியத்திற்கு வழங்கப்படும் நிதியுதவியின் உச்சவரம்பினை ரூபாய் 2 கோடியிலிருந்து ரூபாய் 4 கோடியாகவும் உயர்த்தியுள்ளது.
காதி பொருட்களை பொதுமக்களிடம் எளிதில் பிரபலப்படுத்திட கடந்தாண்டில் கைத்தறி ஆதரவு திட்டத்தின் கீழ் கதர் மற்றும் கிராமப் பொருட்களின் தயாரிப்புகளை விளம்பரப்படுத்தி சந்தைப்படுத்திடும் பணியை மேற்கொள்ள ரூ.40 இலட்சம் செலவில் அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தால் உற்பத்தி செய்யப்படும் கதர் மற்றும் கிராமப் பொருட்கள் தமிழகத்தில் இயங்கி வரும் வாரியத்தின் கதர் அங்காடிகள் (Khadi Kraft) மூலமாக மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மின் வணிகத்தில் நிகழ்ந்துவரும் புதியதொழிற் நுட்ப கண்டுபிடிப்புகளை தனியார் வணிக நிறுவனங்களும் பயன்படுத்தி வருவதனைக் கருத்தில் கொண்டும் மற்றும் பணியாளர்கள் பற்றாக்குறையினைக் கருத்தில் கொண்டும், தற்பொழுது தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தால் கதர் கிராமப் பொருட்கள் மற்றும் பனைப் பொருட்கள் ஆகியவற்றை விற்பனை செய்ய இணைய வழி வணிகம் (On-line Shopping) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான பிரத்யேக இணையதள முகவரி www.tnkvib.org மற்றும் www.tnkhadi.org ஆகும்.
“காதி கிராப்ட்” என்கின்ற வணிக அடையாளம், தமிழ்நாடு முழுவதும் பிரபலப்படுத்தவும், கதர் கிராம தயாரிப்புகளை பெருமளவில் மக்களுக்கு எடுத்துச் செல்லவும், விற்பனையை அதிகரிக்க தனியுரிமை உரிமம் (Franchise) வழங்கப்பட்டுள்ளது. இந்த தனியுரிமைக் கிளைகள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. தனியுரிமை கிளைகள் செயல்பட்டு வரும் இடங்கள் பின்வருமாறு.
1. திருப்பெரும்புதூர்
2. கொல்லிமலை
3. சுசீந்திரம்
4. காஞ்சிபுரம்