ஆன்லைன் வாடிக்கையாளர் சேவை எண் : 7397387896

மாண்புமிகு அமைச்சர்

மாண்புமிகு இராணிப்பேட்டை

திரு ஆர் . காந்தி

கைத்தறி, துணிநூல், கைவினை பொருட்கள் மற்றும் கதர் துறை அமைச்சர்.

முதன்மை செயலாளர்

ஸ்ரீ தர்மேந்திர பிரதாப் யாதவ் இ.ஆ.ப.,

அரசாங்கத்தின் முதன்மை செயலாளர்

கைத்தறி, கைவினைப் பொருட்கள், ஜவுளி மற்றும் காதி துறை. தமிழ்நாடு அரசு.
செயல்பாட்டு பதிவாளர்

சி. சுரேஷ்குமார் இ.ஆ.ப.,

தலைமை நிர்வாக அதிகாரி

பனை பொருட்கள் மேம்பாட்டு வாரியம், தமிழ்நாடு அரசு.

நோக்கங்கள்

தமிழ்நாடு பனை பொருள் வளர்ச்சி வாரியம் 1994-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டம் 15-ன் படி தோற்றுவிக்கப்பட்டு 06.01.1995 முதல் சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.

பனை வெல்லம் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் சம்மேளனங்கள்

தமிழ் நாடு பனை பொருள் வளர்ச்சி வாரியத்தின் கீழ் பனைத் தொழிலை மேம்படுத்திட 720 ஆரம்ப பனைவெல்ல கூட்டுறவு சங்கங்கள், மாவட்ட அளவில் 8 மாவட்ட பனைவெல்ல கூட்டுறவு சம்மேளனங்கள் மற்றும் மாநில அளவில் தமிழ்நாடு மாநில பனை வெல்லம் மற்றும் தும்பு விற்பனை கூட்டுறவு இணையம் ஆகியவைகள் செயல்படுகின்றன. பனை பொருட்களை உற்பத்தி செய்திட தேவையான மூலப் பொருட்கள், கருவிகள் மற்றும் உபகரணங்களை மாநில அரசின் நிதி உதவி பெற்று வழங்குவது, உற்பத்தி செய்த பொருட்களை சம்மேளனங்கள் மூலம் சந்தைப்படுத்துவது, அதன் முலம் பனைத் தொழிலாளர்களின் வருமானத்தை அதிகப்படுத்துவது ஆகியவைகளை நோக்கமாக கொண்டு செயல்படுகிறது.

பனை பொருட்கள்

பனை பொருட்களில் முதன்மையானது பதநீர் ஆகும். பனை வெல்லம் (கருப்பட்டி), பனங்கற்கண்டு, பனஞ்சர்க்கரை, பனங்கற்கண்டு மிட்டாய், கருப்பட்டி சாக்லேட் போன்ற பல்வேறு பனை உணவுப் பொருட்கள் பதநீரை மூலப் பொருளாகக் கொண்டு உற்பத்தி செய்யப்படுகின்றன. பருவ காலத்தில் பனை மரங்கள் அதிகம் உள்ள பகுதிகளில் உள்ள பனை மரங்களிலிருந்து இறக்கப்படும் பதநீர் மக்கள் விரும்பி அருந்தக்கூடிய ஒரு பிரபலமான இயற்கையான பானமாகும்.

பனையிலிருந்து உண்ணாப் பொருட்களான பனந்தும்பு தூரிகைகள், பனை ஓலை விசிறிகள், பாய்கள், பனை ஓலையினாலான பல்வேறு கூடைகள், பனை நார் பொருட்கள் மற்றும் பல்வேறு வகையான இயற்கையான வண்ணம் பூசப்பட்ட மற்றும் வண்ணம் பூசப்படாத கைவினைப் பொருட்கள் போன்றவை பனைத் தொழில் கைவினைஞர்களால் தயாரிக்கப்படுகின்றன.

பதநீர் இறக்குவதற்கான உரிமம்

பதநீரை தவறாக பயன்படுத்தப்படுவதைத் தடுக்கும் நோக்கில் முறையான உரிமத்தின் மூலம் மட்டுமே பதநீர் இறக்கவும் மற்றும் அதை விற்பனை செய்யவும் வேண்டுமென்று அரசு ஆணையிட்டுள்ளது அவ்வாணையின்படி ஒவ்வொரு நிதியாண்டிலும் பதநீர் இறக்குவதற்கான உரிமத்தினை தமிழ்நாடு பனை பொருள் வளர்ச்சி வாரியத்தினால் புதுப்பித்து வழங்கிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

நிர்வாகம்

தமிழ்நாடு பனை பொருள் வளர்ச்சி வாரியத்திற்கென வரவு-செலவு திட்ட ஒதுக்கீடு ஏதுமில்லை. தமிழ்நாடு பனை பொருள் வளர்ச்சி வாரியத்தின் பணியாளர்கள் அனைவரும் தலைமைச் செயல் அலுவலர் (அலுவலால்) உட்பட தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தின் பணியமைப்பிலிருந்து அனுமதிக்கப்பட்டு பணிபுரிந்து வருகின்றனர். தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தின் தலைமைச் செயல் அலுவலரே தமிழ்நாடு பனை பொருள் வளர்ச்சி வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஆரம்ப பனை வெல்லம் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள், மாவட்ட மற்றும் மாறில பனை வெல்லம் விற்பனை கூட்டுறவு சம்மேளனங்கள் ஆகியவற்றிற்கு செயற்பதிவாளர் ஆவார்.

பனை பொருட்கள் மற்றும் சுக்கு காபி விற்பனை

இயற்கை பானங்கள் மற்றும் ஆரோக்கியம் தொடர்பாக பொது மக்களிடம் நல்லதொரு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ள நிலையில், ஒன்பது வகையான மூலிகைப் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் பனை வெல்லம் கலந்த சுக்கு காபி சென்னையில் பல்வேறு பிரதான இடங்களான சென்னை பெருநகர் மெரினா கடற்கரை, குறளகம், மெட்ரோ இரயில் நிலையம் அருகில், கோயம்பேடு புறநகர் பேருந்து முனையம், தீவுத்திடல் போன்ற பல்வேறு இடங்களில் விற்பனை துவங்கப்பட்டு நடைப்பெற்று வருகிறது.

மேலும், சேலம், ஏற்காடு, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை, திருநெல்வேலியில் உள்ள பாளையம்கோட்டை, ஊட்டி, இராமநாதபுரத்தில் உள்ள ஏ.பி.ஜே.அப்துல்கலாம் நினைவிடம் மற்றும் திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலப் பாதையில் சுக்கு காபி, கதர் கிராமத் தொழில் பொருட்கள் மற்றும் பனை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

பல்வேறு வகையான பனை பொருட்களின் விற்பனையை அதிகரித்திட பிரத்யேகமான ஒரு பனை பொருள் விற்பனை நிலையம் சென்னை குறளகம் தரை தளத்தில் செயல்பட்டு வருகிறது.

பனை பொருட்கள் பற்றிய விழிப்புணர்வு

பனை பொருட்களான பதநீர், பனை வெல்லம், பனங்கற்கண்டு, பனை வெல்லம் கலந்த சுக்குகாபி மற்றும் சுக்குகாபி தூள் ஆகியவற்றின் மருத்துவக் குணங்களின் சிறப்புகளை பொது மக்கள் அறிந்து கொள்ள ஏதுவாக சிறப்பான செறிவுமிக்க பாடல் மற்றும் கருத்தினை தெரிவு செய்து, பிரபலமான நடிகர் மற்றும் நடிகைகளைக் கொண்டு குறும் விளம்பரப் படங்களை தயாரித்து அதனை சினிமா தியேட்டர்கள், அரசின் L.E.D. வாகனங்கள், கேபிள் டி.வி. மற்றும் தொலைக்காட்சி சேனல்கள் ஆகியவற்றின் மூலம் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.

பனை பலகை - தொடர்பு விவரங்கள்

044 – 2534076
மின்னஞ்சல்: tnkvibchennai@gmail.com
இடம்: தமிழ்நாடு காதி மற்றும் கிராமத் தொழில் வாரியம்.
குறளகம் கட்டிடம், 5வது தளம்,
எண்.9, எஸ்பிளனேட் சாலை, எஸ்பிளனேட், சென்னை - 600 104.
தயாரிப்பு மற்றும் ஆர்டர் விசாரணைகளுக்கு,
tnkvibchennai@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்பவும்