ஆன்லைன் வாடிக்கையாளர் சேவை எண் : 7397387896

நிர்வாகம்

மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் அவர்கள், தமிழ்நாடு கதர் கிராமத்தொழில் வாரியத்திற்கு தலைவராகவும், அரசினால் நியமனம் செய்யப்படும் அலுவலர்கள் வாரியத்தின் உறுப்பினர்களாகவும் உள்ளனர். திட்டங்களை செயல்படுத்துவதற்கான முக்கிய கொள்கை முடிவுகள் வாரியத்தின் பொறுப்பில் மேற்கொள்ளப்படுகிறது. மேலும், வாரியத்தின் அன்றாட நடவடிக்கைகள் வாரிய உறுப்பினராக உள்ள தலைமைச் செயல் அலுவலரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தின் செயல்பாடுகள் கதர் மற்றும் கிராமத் தொழில்கள் ஆகிய இரண்டு முக்கிய பிரிவுகளை உள்ளடக்கியதாகும்.